Header Ads Widget

இந்திய விவசயிகள் தினம்...

இந்திய விவசயிகள் தினம் டிசம்பர்23


இந்திய விவசாயிகள் தினம்,

 

*இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் சரண்சிங் பிறந்த தினமே விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.


‌* உலக அளவில் உணவுத் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலையில்இ எதிர்காலம்... விவசாயிகள் கையில் தான் உள்ளது என்பதை வலியுறுத்தவும்இ உணவு பாதுகாப்பை வலியுறுத்தவும் டிசம்பர் 23ஆம் தேதி விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது.


‌* இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் ஆகும். இந்தியாவில் இன்றும் மக்கள்தொகையில் 60 சதவிகிதத்திற்கு மேலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களில் தான் ஈடுபட்டு வருகின்றனர்.


சரண் சிங்

* இந்திய குடியரசின் முன்னாள் பிரதமர் திரு.சரண் சிங் 1902ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் மாவட்டத்தின் நூர்பூரில் பிறந்தார்.

 

+ சரண் சிங் சுதந்திர இயக்கத்தின் பகுதியாக அரசியலில் நுழைந்தார். சுதந்திரத்திற்கு பிறகு இவர் 1950ஆம் ஆண்டுஇ ஜவகர்லால் நேருவின் சோசலிச மற்றும் உழடடநஉவiஎளைவ நில பயன்பாடு கொள்கைகளுக்கு எதிரான போரில்இ நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்காக போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கதாக இருந்தது.

 

* மேலும் இவர் வருவாய்இ மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம்இ நீதிஇ தகவல்இ வேளாண்மை ஆகிய பல துறைகளில் பணிபுரிந்துள்ளார். காங்கிரஸ் பிரிந்தபோதுஇ காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் 1967ஆம் ஆண்டு முதல்முறையாக உத்திரப்பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்றார்.

 

* எளிமையான வாழ்க்கையை வாழ்ந்த திரு.சௌத்ரி சரண் சிங் தனது ஓய்வு நேரத்தில் ஜமீன்தாரி முறை ஒழிப்புஇ கூட்டுறவு பண்ணை முறைஇ இந்தியாவில் வறுமை ஒழிப்பும் அதற்கான தீர்வும்இ வேலை செய்பவர்களுக்கு நிலம் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார்.

 

* லட்சக்கணக்கான விவசாயிகள் மத்தியில் பெரும் நம்பிக்கையை உருவாக்கிய சரண்சிங் 1987ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி மறைந்தார்.

 

                                                                      - உயர்ந்திமன்றம் வழக்கறிஞர் P.M.சுந்தரமூர்த்தி

Post a Comment

0 Comments