சங்கராபுரத்தில் எஸ்டிபிஜ கட்சி கொள்கை விளக்க பொதுக்கூட்டம்..!
சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி எஸ்டிபிஜ கட்சியின் சார்பாக கட்சியின் 14 ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சங்கராபுரம் பேருந்து நிலைய பொதுக்கூட்ட மேடையில் நடைபெற்றது சட்டமன்ற தொகுதி தலைவர் பாபு தலைமை தாங்கினார் செயலாளர் சையத் கவுஸ் வரவேற்புரை நிகழ்த்தினார் மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் சிராஜ்தீன், மாவட்ட பொருளாளர் சையத் தாஹிர் அலி, சுற்றுச்சூழல் அணி மாவட்ட தலைவர் ஷா நவாஸ் கான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் காதர், கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தலைவர் அபுபக்கர், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி தலைவர் இப்ராஹிம் ஷெரீப், சங்கராபுரம் நகர நிர்வாகிகள் ஆசாத் அலி, சையத் ரஷீத், குடுஜான், சையத் தஸ்தகீர் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மாவட்ட செயலாளர் தர்பார் பொதுக்கூட்ட நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தார் துவக்க உரை நிகழ்த்திய எஸ்டிபிஜ கட்சி மாவட்ட தலைவர் முகமத் ரபி மனிதர்களின் அடிப்படை தேவையான உணவு,உடை,இருப்பிடம் ஆகியவற்றை பூர்த்தி செய்ய வேண்டியது அரசு கடமை என்றும்,ஆனால் அதற்கு எதிராக இன்று செயல்படும் ஒன்றிய பாஜக அரசின் திட்டங்கள் முறியடிக்க எஸ்டிபிஜ கட்சியின் பின்னால் அணிதிரள வேண்டியதின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எஸ்டிபிஜ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் உமர் பாரூக் இன்றைய இந்தியாவின் சூழ்நிலைகள் எல்லாம் சுட்டிக்காட்டி, வரக்கூடிய காலங்களில் இந்திய மக்களுக்கு எதிராக செயல்பட்டு கொண்டிருக்கூடிய பாசிச சக்திகளை வீழ்த்த, மக்களை நேசிக்கக் கூடியவர்கழ் எஸ்டிபிஜ கட்சியில் அணி திரள வேண்டும் என்ற கோரிக்கையோடு எஸ்டிபிஜ கட்சியின் கொள்கைகளை விளக்கி பேசினார். அதனை தொடர்ந்து பேசிய விழுப்புரம் மண்டல தலைவர் ஷபீக் அஹ்ம்மது பாஜகவின் திட்டங்கள் எல்லாம் சிந்தனை ரீதியானவை என்றும் அவற்றை வீழ்த்த அதேபோன்ற சிந்தனை ரீதியான செயல்பாடுகள் அவசியம் என்றும் கூறினார். விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநில பேச்சாளர் சஹானா ஆலிமா பேசியபோது பெண்களின் பங்களிப்பு இல்லாமல் சமுக மாற்றம் ஏற்படாது என்றும் பெண்களும் அரசியலில் பங்கெடுப்பது காலத்தின் கட்டாயம் என பேசினார். இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் தாஜ்தீன்,விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய செயலாளர் தலித் சந்திரன், இன்சாப் கரீம், மக்கள் அதிகாரம் இராமலிங்கம்,கற்க கசடற நிறுவனர் தேவதிருவருள், வழக்கறிஞர் தமிழ்குமரன்,கம்னியூஸ்ட் கட்சி நகர செயலாளர் சரவணன்,சமூக ஆர்வலர்கள் சக்ஸஸ் ஷபி,சலிம்ஜான், முருகேசன், ஜாபிர் உசேன் உள்ளிட்ட 500 மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டார்கள். பொருளாளர் ரகமத்துல்லா நன்றி கூறினார்.
0 Comments