Header Ads Widget

சங்கராபுரத்தில் பிரேதத்துடன் சாலை மறியலால் பரபரப்பு

சங்கராபுரத்தில் பிரேதத்துடன் சாலை மறியலால் பரபரப்பு..!



சங்கராபுரம் அடுத்த வடசிறுவள்ளுர் கிராமத்தை சேர்ந்த ஜேசிபி டிரைவர் தீபன் வேலைக்கு வராததால் ஆத்திரமடைந்த ஜேசிபி உரிமையாளர் அதே கிராமத்தை சார்ந்த அறிவழகன் தாக்கியதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் சங்கராபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே வடசிறுவள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா மகன் தீபன் வயது 35 இவர் ஜேசிபி டிரைவராக கடந்த சில ஆண்டுகளாக அதே ஊரை சார்ந்த மாணிக்கபிள்ளை மகன் அறிவழகன் என்பவரிடம் வேலை செய்து வந்துள்ளார் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தீபன் வேலைக்கு அறிவழகனிடம் செல்லாமல் வேறு இடத்தில் வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது, கடந்த திங்கள் கிழமையன்று தீபன் வீட்டிற்கு இரவு சுமார் 9 மணியளவில் சென்ற அறிவழகன் வேலை செய்த போது பணம் தீபன் தரவேண்டியுள்ளதாக கூறி பணத்தை கொடு அல்லது மீண்டும் வேலைக்கு வா என அழைத்ததாகவும் அவர்களுக்குள் எவ்வித உடன்பாடும் ஏற்படாததால் ஆத்திரமடைந்த அறிவழகன் தீபனை தக்கியதாகவும் கூறப்படுகிறது தாக்கப்பட்ட தீபனை உறவினர்கள் சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர் அங்கும் மருத்துவர்கள் தீபனை பரிசோதித்து பின்னர் இங்கு இயலாது என கூறி விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரிக்கு பரிந்துரத்துள்ளனர், மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் பரிசோதித்து தலையில் நரம்பு வெடித்துள்ளதாகவும் இரத்த கசிவு உள்ளதாகவும் கூறி சென்னைக்கு உயர் சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர் அங்கும் சிகிச்சை பலனின்றி தீபன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் எனக்கூறப்படுகிறது அவரின் பிரேதத்தை எடுத்து வந்த உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சங்கராபுரம் கடை வீதியில் பிரேதத்துடன் அறிவழகனை உடனடியாக கைது செய்யக்கோறி சாலை மறியலில் ஈடுபட்டனர் தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இறந்த தீபனுக்கு 9 வயதிற்கு உட்பட்டு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments