சங்கராபுரத்தில் மே தின பேரணி, கொண்டாட்டம்...!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் தையல் தொழிலாளர்கள் மே தின பேரணி நடத்தினர் இதில் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் கலந்துகொண்டு பேரணியை துவக்கி வைத்தார்
பேரணியாக சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை சென்று பின்னர் கடைவீதியில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர் அதை தொடர்ந்து தமிழக அரசின் நலவாரியம் மூலமாக கட்டிட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இலவச வீடு கட்டும் திட்டம், பெண் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை ரூபாய் 18000 வழங்கும் திட்டம் போன்றவற்றை தையல் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டுமெனவும், நலிவடைந்த தையல் தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை முன்வைத்தனர் இந்த நிகழ்ச்சி சங்கத்தின் தலைவர் மனோ செந்தில், செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது மேலும் நிகழ்ச்சியை பரமசிவம், சக்திவேல், அண்ணாதுரை, ரமேஸ், ரவி ஆகியோர் ஒருங்கிணைத்தனர் பேரணியில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
செய்திகள் மாரிமுத்து
0 Comments