Header Ads Widget

திடக்கழிவு மேலாண்மையில் திசைகாட்டுகிறது வையம்பட்டி...!

திடக்கழிவு மேலாண்மையில் திசைகாட்டுகிறது வையம்பட்டி...!



இந்தியாவிலேயே முதன்முறையாக திடக்கழிவு மேலாண்மை குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பு வையம்பட்டி சூர்யா நினைவு அறக்கட்டளை வளாகத்தில் நடத்தப்பட்டது . 50 நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சியில் உயிரிமருத்துவக் கழிவு, நெகழிக் கழிவு, கட்டிடக் கழிவு மற்றும் மின்னனுக் கழிவு ஆகியவற்றை கையாளுவதற்கான நவீன தொழில்நுட்பங்கள் கற்பிக்கப்பட்டது. மத்திய சூழலியல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் கீழ் டெல்லியைச் சார்ந்த TERI நிறுவனத்தின் வல்லுனர்களை கொண்டு ஊரகப்பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 30 நபர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது . ஏற்கனவே TERI நிறுவனம் மேற்கு வங்கம், ஒடிஸ்ஸா, உத்திராகண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்களில் 40-க்கும் மேற்பட்ட பசுமைசார் திறன் மேம்பாட்டு வகுப்புகளை நடத்திக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. திருச்சி மாவட்டத்தில் ஊரக மக்களின் நிலையான வாழ்வியல் மேம்பாட்டிற்காக பணியாற்றி வரும் ஃபார்ம் இந்தியா மற்றும் சூர்யா நினைவு அறக்கட்டளை இணைந்து பயிற்சி வகுப்புகளை திறம்பட நடத்தியுள்ளனர். நீடித்த நிலையான வளர்ச்சிக்கான தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில் வாய்ப்புகளை வழங்கிவரும் மண்டேலா சொலூசன்ஸ் நிறுவனம், ஃபார்ம் இந்தியா நிறுவனம் சூர்யா நினைவு அறக்கட்டளை இணைந்து பயிற்சி பெற்றவர்களுக்கு வருவாய் வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளது. பயிற்சியின் நிறைவில் கழிவு மேலான்மையில் திறன்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை கற்ற்றுத் தேர்ந்த நபர்கள் மருத்துவமனைகள்,பள்ளிகள், கல்லூரிகள், வேளான் பண்ணைகள், உள்ளாட்சி அமைப்புகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிவாய்ப்புப் பெற்றிருக்கும் இவர்கள் கழிவு மேலாண்மையில் புதுமைகள் செய்து படிப்படியாக சூழலியல் பாதுகாப்பிற்கு வித்திடுவார்கள் என்பதில் ஐயம்மில்லை. இதுபோன்ற மத்திய மாநில அரசுகளின் பசுமைசார் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் சூழலுக்குகந்த தொழில்முனைவை ஊக்குவிப்பதோடு பசுமைசார் பணிவாய்ப்புகளையும் அதிகரிக்கும். இதுபோன்ற பயிற்சி மற்றும் விழிப்புணர்வு செயல்பாடுகள் குப்பை மேடுகளை குபேர மேடுகளாக மாற்றிடும். சராசரியாக ஒரு நாளைக்கு 490 கிராம் குப்பையை உற்பத்தி செய்யும் இந்தியர்கள் நுகர்வு குறைப்பு, மறுசுழற்சி, மறுபயண்பாடு , ஆகியவற்றை அறிய வேண்டியது காலத்தின் கட்டாயம். பூவுலகை மீட்க முயலும் பசுமை போராளிகளை பட்டைதீட்டும் இது போன்ற பசுமைசார் பயிற்சி வகுப்புகள் இனிதே வரவேற்கப்பட வேண்டியவை. இந்த விழாவின் நிறைவு நாளில் மாணவிகள் துப்புரவு தொழிலாளர்கள் வையம்பட்டி வார்டு உறுப்பினர்கள் வையம்பட்டி தலைவர் முன்னிலையில் பேரணி நடத்தப்பட்டது மாணவிகள் குப்பைகளை பிரித்து போடுவதற்கும் மறுசுழற்சி முறையில் பயன்படுத்துவதற்கும் முறைகளை மக்களிடம் எடுத்து வைத்தனர் குப்பையில்லா உலகம் படைப்போம் ஒரே பூமி என்ற தலைப்பில் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர் பிறகு சூரியா நினைவு அறக்கட்டளையின் நிகழ்ச்சி தொடங்கி பயிற்சி பெற்ற 30 மாணவியருக்கும் பட்டய சான்றிதழ் வழங்கப்பட்டது அவர்களின் வேலையை உறுதி செய்யும் ஆணை வழங்கப்பட்டது இந்த விழாவிற்கு வையம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரும் சூரியா நினைவு அறக்கட்டளையின் தலைவருமான சூர்யா சுப்பிரமணியன் தலைமையேற்று நடத்திவரும் நடத்திக் கொடுத்தார் இந்த விழாவில் TERI நிறுவனத்தின் Dr.PK பட்டாச்சாரியார் அவர்கள் சிறப்பு விருந்தினராக திருமதி பல்லவி TERI கலந்து கொண்டனர் .வையம்பட்டி ஒன்றிய தலைவர் குணசீலன் வையம்பட்டி பிடிஓ ரேவதி அம்மா சந்தீப் மண்டல சொல்யூஷன் சிறப்புரை வழங்கினார்கள் இந்த விழாவில் பாம் இந்தியா நிறுவனர் தங்கபாண்டியன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார் இந்த நிகழ்ச்சியின் நன்றியுரையை சூரியா நினைவு அறக்கட்டளையின் பொருளாளர் நாகலட்சுமி அம்மா அவர்கள் வழங்கினார்.


செய்தியாளர் S.K. சபியுல்லா மணப்பாறை

Post a Comment

0 Comments