Header Ads Widget

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போதிய பேருந்து வசதியின்மையால் மாணவ மாணவிகள் கடும்அவதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போதிய பேருந்து வசதியில்லாததால் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதி ஆபத்தான நிலையில் பயணிக்கும் அவலநிலை


கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருந்து அரசு கலைக்கல்லூரி ரங்கநாதபுரம் அகரக்கோட்டாலம் அணைக்கரைகோட்டாலம் பழையசிறுவங்கூர் கல்லேரிக்குப்பம் பழையனூர் விரியூர் வழியாக சங்கராபுரம் செல்ல போதிய பேருந்து வசதியில்லாததால் பொது மக்களும் பள்ளிக் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆபத்தான நிலையில் பேருந்தில் படியில் தொங்கியும், பேருந்தின் மேற்கூறையில் பயணித்தும் வரும் அவலநிலை உள்ளதாகவும் வயதானவர்கள் மற்றும் கர்ப்பினிப் பெண்கள் பயணிக்க இயலாத நிலையில் மிக குறைந்த அளவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது என கிராம மக்கள் வேதனை தெரித்துள்ளனர்,


மேலும் பழைய சிறுவங்கூர் கிராமத்தை சார்ந்த மாணவ, மாணவிகள் சார்பில் கடந்த ஆகஸ்டு மாதம் அரசுக்கு கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்த கேரிக்கை முன்வைத்தும் பலனளிக்கவில்லை எனவும் கூறினர்,


அவர்கள் அளித்த கோரிக்கை விபரம்


அனுப்புதல்,
திருவள்ளுவர்
அரசு கலைக்கல்லூரி
மாணவ மாணவிகள்.
சிறுவங்கூர்-அஞ்சல்.
கள்ளக்குறிச்சி-606202
கள்ளக்குறிச்சி--மாவட்டம்.


பெறுதல்,
மாண்புமிகு உயர்திரு, தமிழக அரசு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்-ஆர் விஜயபாஸ்கர் அவர்கள்.
தமிழ்நாடு சட்ட மன்றம்.
தலைமை செயலகம்
ஜார்ஜ் கோட்டை.
சென்னை-9


மேன்மைமிகு‌, போக்குவரத்து துறை அமைச்சர் அய்யா அவர்களுக்கு வணக்கம்!!


அய்யா தயவுசெய்து அலட்சியம் செய்யாதீர்கள்!!
இது கள்ளக்குறிச்சி அரசு கலைக்கல்லூரி ஏழை எளிய மாணவர்களின் நீண்டகால பிரச்சினைகள்.
கள்ளக்குறிச்சி அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் அவதி!.அரசு பஸ் வசதியை ஏற்படுத்த உரிய நடவடிக்கை தேவை!!


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு கலைக்கல்லூரிக்கு போதிய அரசு பஸ் வசதிகள் இல்லாததால் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.நீண்ட துாரம் கடும் வெயில் நடந்து சென்று,மாணவர்கள் கல்வி பயிலும் அவலம் நீடிக்கிறது.
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் எல்லையில் உள்ள சமத்துவபுரம் எதிரில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சங்கராபுரம், பகண்டைகூட்ரோடு, மையனூர்,சின்னசேலம், தியாகதுருகம், ரிஷிவந்தியம், கச்சிராயபாளையம், கல்வராயன்மலை, எலவனாசூர்கோட்டை உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏழை எளிய மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர்.
இக்கல்லுாரியில் பி.காம்., பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.எஸ்சி., கணிதம், கணிப்பொறியியல், இயற்பியல், வேதியியல் ஆகிய இளநிலை பாடப்பிரிவுகள் மற்றும் எம்.ஏ., ஆங்கிலம், எம்.காம்., எம்.எஸ்சி., கணிதம், கணிப்பொறியியல் ஆகிய முதுநிலை பாடப்பிரிவுகள் உள்ளன.இரண்டு தளங்களில்,15 வகுப்பறைகளுடன் கூடிய இக்கல்லுாரியில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஏழை மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது கல்லூரியில் வகுப்புகள்
காலை,8:30 மணி மற்றும் பிற்பகல்,1:00 மணி என இரு ஷிப்ட் முறையில் கல்லுாரி இயங்கி வருகிறது.கல்லுாரி முதல்வர், விரிவுரையாளர்கள்,கவுர விரிவுரையாளர்கள், பணியாளர்கள் என மொத்தம்,39பேர் பணிபுரிந்து வருகின்றனர். இக்கல்லூரி மாலை,5:00 மணி வரை வகுப்புகள் நடக்கிறது.
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்திலிருந்து அரசு கலைக்கல்லூரி,அகரக்கோட்டாலம், வழியாக பழையசிறுவங்கூர் வரை அதிகாலை முதல் இரவு வரை,8 முறை அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது.இதில் கலைக்கல்லுாரிக்கு மாணவர்கள் செல்லும் வகையில் பஸ் நிலையத்திலிருந்து காலை நேரத்தில்(டி33) 8:30,மணிக்கும், நண்பகலில்(டி13)12:05, மணிக்கும் என இரு பஸ்கள் மட்டுமே கல்லூரியின் நேரத்திற்கு ஏற்ப அமைந்துள்ளது. 
மீதமுள்ள பஸ்கள் கல்லுாரியின் நேரத்திற்கு ஏற்ப அமையாததால் பெரும்பாலான மாணவ,மாணவிகள் கல்லுாரிக்கு கடுமையான வெயிலும் மழையிலும் நடந்தே செல்கின்றனர். கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்திலிருந்து சங்கராபுரம் மார்க்கம் செல்லக்கூடிய அரசு டவுன் பஸ்களில் ஏறி, மாணவர்கள் ரோடுமாமந்துார் பஸ் நிறுத்தத்தில் இறங்கி ஒன்னரை கி.மீ., தூரத்திற்க்கு மேல் கல்லுாரிக்கு நடந்து செல்கின்றனர்.கல்லுாரியில் வகுப்புகள் துவங்கும் போதும் சரி,முடியும் தருவாயிலும் சரி போதிய பஸ் வசதிகள் இல்லாததால், மாணவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், பகல் நேரங்களில் கல்லுாரி முடிந்து மதிய நேரத்தில் கடும் வெயிலில் மாணவர்கள் நடந்து சென்றாலும், ரோடுமாமந்துார் பஸ் நிறுத்தத்தில்,பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவநிலை ஏற்பட்டுள்ளது. அவ்வழியாக செல்லும் ஆட்டோக்கள்,தனியார் பஸ்களில் கட்டணம் கொடுத்து,மாணவர்கள் பயணிக்கின்றனர். கள்ளக்குறிச்சி சுற்றியுள்ள
கிராமப்புற மாணவ மாணவிகள் அதிகளவில் படித்து வரும் கள்ளக்குறிச்சி அரசு கலை கல்லுாரிக்கு,போதுமான அளவில் கூடுதல் அரசு  பஸ் கள்கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்திலிருந்து திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி அகரக்கோட்டலம், பழையசிறுவங்கூர், வழியாக சங்கராபுரம், பகண்டைகூட்ரோடு, தியாகதுருகம்,ரிஷிவந்தியம், போன்ற பகுதிக்கு பஸ் இயக்க வேண்டும் மேற்கண்ட பகுதியில் இருந்து மாணவர்கள் அதிகளவில் பயின்று வருகின்றனர் இந்த பகுதியில் இருந்து தற்போது ஒரு பஸ் சேவை கூட இல்லை என்றும் மாணவர்கள் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.இந்த பகுதி மாணவர்கள் வந்து செல்லும் வகையில் காலை மதியம் மாலை என மூன்று நேரமும் கல்லூரி நேரத்தில் மாணவர்கள் எதுவாக பஸ்கள் இயக்குவதற்கு நீங்கள் தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் வைத்துள்ளனர்.


கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு, அ.பிரபு அவர்களின் முயற்சியால் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்திலிருந்து,டி33, டி39, டி18,டி48 என இருவேளையும் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் எதுவாக தொடர்ந்து பஸ் சேவை இருந்தது கடந்த ஆண்டு முதல் தீடீரென நிறுத்தம் செய்யப்பட்டது.
மேலும் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நீண்ட நேரம் வீணாக நின்று கொண்டு இருக்கும் டி,33,பஸ்சை மேலும் ஒரு முறை அரசு கலைக்கல்லூரி, அகரக்கோட்டாலம், வழியாக பழையசிறுவங்கூர் சென்றால் கல்லூரி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மிகவும் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளதாக கூறினர்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உட்கிராமங்களில் போதிய பேருந்து வசதியினை ஏற்படுத்த தமிழ அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனாடியாக முனைப்புக் காட்டுமா என பொது மக்கள் எதிர்பார்ப்பு....


Post a Comment

0 Comments