Header Ads Widget

மணப்பாறை அருகே நிலைதடுமாறிய கார் பள்ளத்தில் உருண்டதில் ஒருவர் பலி.11 பேர் காயம்

மணப்பாறை அருகே நிலைதடுமாறிய கார் பள்ளத்தில் உருண்டதில் ஒருவர் பலி.11 பேர் காயம்..!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கண்ணுடையான் பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் (26) வீட்டின் அருகே இருந்த பனைமரத்தில் நேற்று ஏறியவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயம் டைந்த அவரை உறவினர்கள் மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்கப்பட்டு சிகிச்சையில் உள்ளர். இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள உறவினரை பார்க்க வேண்டி நேற்று இரவு 7 மணியளவில் திருச்சி உரையூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (29) இவரது மனைவி பிருந்தா(25),மணிகண்டன்(12),சந்தியா (15),ஷர்மிளா (17),ஷாலினி (20),பிரேமா (18),தனலட்சுமி (25),அழகம்மாள் (70),போதும் பொண்ணு (35),மெய்யா த்தாள்(45),செந்தில்குமார்(42) ஆகியோர் ஒரு காரில் மணப்பாறை மருத்துவமனையில் இருக்கும் பிரபாகரனை பார்க்க வேண்டி புறப்பட்டனர். காரை பிரகாஷ் (29) என்பவர் ஒட்டி வந்துள்ளார். கண்ணுடையான்பட்டியில் இருந்து புறப்பட்ட கார் முத்தப்புடையான்பட்டி அருகே கே.பெரியபட்டி பிரிவு சாலை அருகே கார் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நிலைதடுமாறி சென்டர் மிடினில் ஏறி திருச்சி சாலையை கடந்து அருகில் இருந்த பள்ளத்தில் உருண்டது. பின்னர் அருகில் இருந்தவர்கள் விபத்து பற்றி ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர் தகவலின்பேரில் சம்பவ இடம் விரைந்து வந்த மணப்பாறை காவல் ஆய்வாளர் கருணாகரன் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் மணப்பாறை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதில் டிரைவர் பிரகாஷ் மனைவி பிருந்த பலத்த காயத்துடன் மருத்துவமனை கொண்டும் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். பிருந்தாவின் கணவர் மற்றும் உறவினர்கள் 11 பேர் பலத்த காயத்துடன் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மணப்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


செய்தியாளர் S.K. சபியுல்லா

Post a Comment

0 Comments