Header Ads Widget

சங்கராபுரம் அருகே தபெதிக வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

சங்கராபுரம் அருகே தபெதிக வினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!



கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே  பகண்டை  கூட்ரோடு வாணாபுரம் மும்முனை சந்திப்பில் பகண்டை கூட்டுச்சாலையில் அமைந்துள்ள கூடுதல் சுகாதார நிலையத்தை வட்டார மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் எனவும், புதிய வழித்தடங்களில் அரசு பேருந்துகளை அதிகரித்திட வேண்டும் எனவும் நவீனப்படுத்தப்பட்ட பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கையினை வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது மாவட்ட செயலாளர் பிரபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் அப்பாவு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் பூமாலை தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்டச் செயலாளர் ராமலிங்கம், வழக்கறிஞர் சாமிநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர் நிகழ்ச்சியில் நாத்திக பிரியன், சேகர், முத்து, கிருஷ்ணமூர்த்தி, கலையைதர்ஷன், தமிழரசன், அப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர் .ஆர்ப்பாட்டத்தில் 30 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

செய்திகள் மாரிமுத்து

Post a Comment

0 Comments