Header Ads Widget

தாஜ்மஹாலில் லட்டு வழங்கிய இந்துமகா சபாவினர்

தாஜ்மஹாலில் லட்டு வழங்கிய இந்துமகா சபாவினர்...!


தாஜ்மஹாலில் திறக்கப்படாமல் உள்ள 22 அறைகளைத் திறந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தொல்லியல் ஆய்வு மையத்திற்கு உத்தரவிடக் கோரிய மனுவை அலகாபாத் ஐகோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.


தாஜ்மஹாலில் திறக்கப்படாமல் உள்ள 22 அறைகளைத் திறந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தொல்லியல் ஆய்வு மையத்திற்கு உத்தரவிடக் கோரிய மனுவை அலகாபாத் ஐகோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அயோத்தியின் பாஜக செய்தித்தொடர்பாளரான டாக்டர்.ரஜ்னீஷ் என்பவர் தொடுத்த மனு, கோர்ட்டில் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இதை கொண்டாடும் விதத்தில் ஆக்ராவில் தாஜ்மஹாலில் அங்கு வந்தவர்களுக்கு லட்டு வழங்கப்பட்டது.


இந்நிலையில், தாஜ்மஹாலில் லட்டு வழங்கிய இந்துமகா சபாவினருக்கு தடை விதிக்கப்பட்டது. 


உத்திரப்பிரதேசத்தில் உள்ள தாஜ்மகால் கட்டப்படுவதற்காக, அங்கிருந்த தேஜாலாயா எனப்படும் சிவன் கோயில் இடிக்கப்பட்டதாகப் புகார் உள்ளது. கோயிலின் சிலைகள், தாஜ்மகாலில் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளில் இருப்பதாகவும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது மேலும் இதை திறந்து பார்க்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.இந்த மனுவில், தாஜ்மஹால் கட்டப்படுவதற்கு முன், அப்பகுதியில் கோயில் இருந்ததாகக் கூறி தற்போது மீண்டும் தொடுக்கப்பட்ட வழக்கு அலகாபாத் ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


ஹைகோர்ட்டால் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளதால், இவற்றை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் விதத்தில், இந்து மகாசபாவினர் நேற்று, தாஜ்மகால் முன் லட்டுக்களை விநியோகித்தனர். இதைக் கண்ட உத்தரப்பிரதேச போலீசார் அவர்களைத் தடுத்து திருப்பி அனுப்பினர். தாஜ்மகாலில் உள்ள சுற்றுலா பயணிகளுக்கு லட்டு வழங்க முற்பட்டவர்களை அனுமதிக்கப்படவில்லை.

Post a Comment

0 Comments