Header Ads Widget

காயம் காரணமாக சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகினார்

 ஐபிஎல் சூர்யகுமார் யாதவ், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் கட்டை விரலில் காயம் காரணமாக முதல் இரண்டு லீக் ஆட்டங்களில் விளையாடவில்லை.

 காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகினார் சூர்யகுமார் யாதவ்

 மும்பை:

தற்போதைய ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ் 8 போட்டிகளில் 3 அரைசதங்களுடன் 303 ரன்கள் குவித்துள்ளார்.

இதற்கிடையில், சூர்யகுமார் யாதவ் தொடை காயம் காரணமாக தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.


கடந்த 6ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது சூர்யகுமார் யாதவ் காயம் அடைந்தார். மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உடல் தகுதி அணியுடன் ஆலோசனை நடத்தி, நேற்றைய போட்டிக்கு முன்னதாக அவரை அணியில் இருந்து விடுவிக்க முடிவு செய்தது.

Post a Comment

0 Comments