Header Ads Widget

ஏழைகளின் கண்ணீரை துடைத்திடுவோம்! மத ஒற்றுமையை காத்திடுவோம் எஸ்.டி.பி.ஐ.கட்சியின் முகமத் ரபி பெருநாள் வாழ்த்து.

ஏழைகளின் கண்ணீரை துடைத்திடுவோம்! மத ஒற்றுமையை காத்திடுவோம் எஸ்.டி.பி.ஐ.கட்சியின் முகமத் ரபி பெருநாள் வாழ்த்து....!

எஸ்.டி.பி.ஐ.கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் முகமத் ரபி  பெருநாள் வாழ்த்து

”ஈதுல் ஃபித்ர்” எனும் ஈகை பெருநாளை - இன்பத் திருநாளை உவகையுடன் கொண்டாடும் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் வருடம் முழுவதும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் வாழ்வதற்கு மகத்தான பயிற்சியை தரும் மாண்புமிகு மாதமே ரமழான் திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட இப்புனித மாதத்தில் எடுத்துக் கொண்ட முப்பது நாட்கள் பயிற்சி வாழ்நாள் முழுவதும் பயன்தந்திட வாழ்த்துகிறேன் முப்பது நாட்கள் உண்ணாமல், பருகாமல், நோன்பிருந்து, இறைவனை விழித்திருந்து, தனித்திருந்து, இறைமறையை தினம் ஓதி, இல்லாதவருக்கு ஈந்து இறைவழிபாட்டில் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி அதன் இறுதியாக இன்பமுடன் கொண்டாடும் பெருநாளே ஈகைத்திருநாள் புத்தாடை அணிந்து உணவுகளை உட்கொண்டு உற்றார் உறவுகளுடன் இன்பமுடன் இந்நாளில் மகிழ்வது போல் வாழ்நாள் முழுவதும் மகிழ்வுடன் வாழ எல்லா வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறேன். வறியவர்களுக்கு உதவிடுவோம்! ஏழைகளின் கண்ணீரை துடைத்திடுவோம்! மதநல்லிணக்கத்தையும், மத ஒற்றுமையையும் காத்திடுவோம்! மத வெறியை மாய்த்திடுவோம் என இந் நன்னாளில் நாம் அனைவரும் சபதமேற்போம் என்று கூறியுள்ளார்


செய்திகள் சையது ஹசன்ஷாஅலி

Post a Comment

0 Comments