Header Ads Widget

மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறித்து முக்கிய அறிவிப்பு


Schools to open in Tamil Nadu from this date, CM Stalin issues instructions  | NewsTrack English 1

 

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மார்ச் 2020 முதல் மூடப்பட்டு ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டன. அதை தொடர்ந்து

இந்த ஆண்டு வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதால், நேரடி வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்லத் தொடங்குகின்றனர்.

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், இதற்கான கால அட்டவணை மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, +2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மே 5 முதல் மே 28 வரை நடைபெறுகிறது.

இதேபோல், 11ம் வகுப்பு மே 9ம் தேதி முதல் மே 31ம் தேதி வரையிலும், 10ம் வகுப்பு இன்று (மே 6ம் தேதி) தொடங்கி 30ம் தேதி வரையிலும் நடக்கிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8.37 லட்சம் மாணவர்கள் +2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர். அதேபோல் இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 9.55 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வெழுதினர்.

இதனிடையே, பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் ஜூன் 2ஆம் தேதி தொடங்கும் என்றும், +2 பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 அதேபோல், +1 தேர்வு முடிவுகள் ஜூலை 7ம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17ம் தேதியும் வெளியிடப்படும்.மேலும், 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மே 14 முதல் ஜூன் வரை கோடை விடுமுறை என கல்வித்துறை அறிவித்துள்ளது. 12. 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 13 ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளன.

Post a Comment

0 Comments