Header Ads Widget

பள்ளி மேலாண்மைக் குழு பற்றி தொடர்ந்து ஒரு இயக்கம் எழுதுவது ஏன் எதற்கு

பள்ளி மேலாண்மைக் குழு பற்றி தொடர்ந்து ஒரு இயக்கம் எழுதுவது ஏன்? எதற்கு?....பள்ளி மேலாண்மைக் குழு (School Management Committe(SMC) பற்றி தொடர்ந்து ஒரு இயக்கம் எழுதுவது ஏன்? எதற்கு? அதனால் என்ன பயன்? யாருக்கு பயன்?  அக்குழு ஏன் செயல்படாமல் இருந்தது? யார் காரணம்? இக்குழுவினால் கல்வி வளர்ந்துவிடுமா? ஊழல் குறைந்து விடுமா? எதற்காக இந்த போராட்டம்? என்ற கேள்வியெல்லாம் பொது வெளியில் சமீப காலமாக எங்களிடம் கேட்கப்படுகிறது.  


இதற்கு விடை காண்பதற்கும், போராட்டத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வதற்கும், கீழ்காணும் வரலாற்று பின்னனியை படிக்க வேணுமாய் கேட்டுக்கொள்கிறேன். 


அரசமைப்பு சட்டத்தில்  21 என்ற பிரிவு, தனி மனிதன் உயிர் வாழ்வதையும், அவனின் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துகிறது. இந்த பிரிவு  2002-இல் 86-வது திருத்தமாக 21-A என திருத்தப்படுகிறது. திருத்தப்பட்ட இப்பிரிவு, கல்வி என்பது அடிப்படை உரிமை, 6-14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயமாக இலவச கல்வி கொடுக்க வேண்டியது அரசின் சட்டப்படியான கடமை என வரையறுத்தது. 


2002 இல் திருத்தப்பட்ட மேற்படி பிரிவுக்கு உரிய சட்ட வடிவத்தை கொடுப்பதற்கு வாஜ்பாய் தலைமையிலான அன்றைய  மத்திய அரசுக்கு மனமில்லை. 2004 முதல் இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு அக்கட்சிகளின்  வற்புறுத்தலால் இலவச கட்டாய கல்வி பெறும் உரிமைச் சட்ட மசோதா-2005 என கொண்டுவருகிறது. மசோதாவின் வரைவுக் குழவில் இடதுசாரி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும்  பங்கு பெற்றதால் கல்வி தொடர்பாக மிக மிக அற்புதமான அம்சங்கள் இடம் பெற்றன.


அதில் ஒன்று, மசோதாவின் அறிமுக பாராவில் "Our suggestions mainly stress the need for decentralised administration, autonomy to school management committee's " equitable quality" of education for all" அதாவது, "அனைவருக்கும் சரிசமமான தரமான கல்வியை கொடுக்க வேண்டுமானால் பரவலாக்கப்பட்ட நிர்வாகம், சுயசார்புடைய பள்ளி மேலாண்மைக் குழு ஆகியவற்றை வலியுறுத்துவதே எங்களின் முக்கிய நோக்கமாகும்"


அனைத்து தரப்புக்கும் கல்வி கொடுக்க வேண்டுமென்ற முக்கியமான இந்த மசோதா நிறைவேறியதா இல்லையா என்பதை நாளை பார்ப்போம்


க.திருப்பதி
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
அரசுப் பள்ளி பாதுகாப்பு இயக்கம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம்.


Post a Comment

0 Comments