Header Ads Widget

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரும்பு வெட்ட ஆட்கள்கள் இல்லாததால் இயந்திர உதவியை நாடும் விவசாயிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரும்பு வெட்ட கூலி ஆட்களுக்கு டிமாண்ட் இயந்திரங்கள் உதவியை விவசாயிகள் நாடும் அவல நிலை....


கள்ளக்குறிச்சி அருகே பழைய சிறுவங்கூரில் கரும்பு வெட்ட கூலி ஆட்கள் கிடைக்காததால் இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.


கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பகுதியில் அதிகளவு கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. தற்போது அறுவடை துவங்கியுள்ள நிலையில், கரும்பு வெட்ட கூலி ஆட்கள் கிடைப்பதில் கடும் சிரଞஹ ஏற்பட்டுள்ளது. ஆட்கள் கிடைத்தாலும் அதிகளவு ஊதியம் கேட்பதால் விவசாயிகள் புலம்புகின்றனர். இதனால் விவசாய பணிகளுக்கு இயந்திரங்களை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது


ரிஷிவந்தியம் பகுதியில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபடும் ஒரு நபருக்கு, நாள் ஒன்றுக்கு 700 ரூபாய் வரை ஊதியம் அளிக்கப்படுகிறது. கூலி ஆட்கள் மூலம் அறுவடை செய்தால் ஒரு ஏக்கர் பரப்பளவில் 50 டன் வரை கரும்பு கிடைக்கும்


மேலும் ஆலையில் கட்டு கோது கழிவுக்காக மொத்த எடையில், ஒரு சதவீத எடை குறைத்து கணக்கிடப்படும் ஒரு ஏக்கர் கரும்பு பயிரினை முழுவதுமாக அறுவடை செய்ய 2 நாட்கள் வரை தேவைப்படுகிறது ஆனால் கூலி ஆட்கள் கிடைக்காததால் ஒரு வருடத்தில் அறுவடை செய்ய வேண்டிய கரும்பு பயிர் 15 மாதங்கள் கழித்து இயந்திரம் மூலம் வெட்டப்படுகிறது


இயந்திரம் மூலம் அறுவடை செய்தால் ஏராளமான கரும்புகள் நசுங்கி வீணாகியும், தரையோடு சாய்ந்து கிடக்கும் கரும்புகளை அறுவடை செய்யாமலும் அப்படியே விட்டுவிடும் மேலும் விளைநிலத்தில் கரும்பு அறுவடை இயந்திரம் மற்றும் டிராக்டர்கள் செல்வதால் கரும்பின் அடிப்பகுதி சேதமடைந்து அடுத்த முறை சாகுபடியில் கரும்பு வளராத சூழ்நிலை ஏற்படுத்துகிறது.


தியாகதுருகம் பகுதியில் உள்ள தனியார் ஆலையில் பதிவு செய்த கரும்புகள் அனைத்தும், கச்சிராயபாளையம் பகுதியில் இயங்கும் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு மாற்றப்பட்டுள்ளது அங்கு இயந்திரம் மூலம் அறுவடை செய்த கரும்பு பயிருக்கு கட்டு கோது கழிவுக்காக மொத்த எடையில் 11 சதவீத எடை குறைத்து கணக்கிடப்படுவதால் பெருமளவு நஷ்டம் ஏற்படுவதாக ரிஷிவந்தியம் பகுதி விவசாயிகள் புலம்புகின்றனர் விவசாய பணிக்கு கூலி ஆட்கள் கிடைக்காததால் நஷ்டத்திற்கு கரும்புகளை வெட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்...


Post a Comment

0 Comments