Header Ads Widget

சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் சாலைப் பாதுகாப்பு வாரம் நிகழ்ச்சி

சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) சார்பில் சாலைப் பாதுகாப்பு வாரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது



"சாலைப் பாதுகாப்பு - உயிர் பாதுகாப்பு


ஓட்டுநருக்கான சாலைப் பாதுகாப்பு குறிப்புகள் எடுத்துறைக்கப்பட்டது அவை கீழ் வருமாறு,


1. மத்திய வேளையில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.


2. ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டு விட்டு போட்டிருந்தால் ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்டு நோடுகளாக போட்டியிருந்தால் முந்தக்கூடாது என்று பொருள்.


3. ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக்கோடுகள் போட்டிருந்தால் அதை ஒரு தடுப்புச் சுவராக கருத வேண்டும்.


4. நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மி.க்கு முன்பே டிம் செய்ய வேண்டும்.


5. வாகனத்தை இயக்கும்போது முழுக்கவனமும் சிந்தனையும் சாலையிலேயே இருக்கவேண்டும்.


6. வேகம் விவேகமல்ல, அதிவேகம் ஆபத்தானது என்பதை நன்கு உணர்ந்து செயல்படுவீர்.


7. பயணிகள் காத்திருக்கும் பேருந்து நிறுத்தங்களில் கடந்து செல்லும் வாகனங்களுக்கு இடையூரின்றி பேருந்தினை நிறுத்தி பயணிகளை ஏற்றுவீர்.


8. சர்வீஸ் சாலை உள்ள இடங்களில் சர்வீஸ் ரோட்டில் இயக்கி பயணிகளை இறக்கி ஏற்றுவீர்.


9. சாலை சந்திப்புகளில் நின்று கவனித்து, பின் பேருந்தை செலுத்துவீர்.


10.பேருந்து நிலையம் மற்றும் நிறுத்தங்களிலிருந்து வாகனத்தை நகர்த்தும் போது சைடு கண்ணாடி வழியாக ஓடிவந்து ஏறுபவர்கள் யாரும் உள்ளனரா என்பதை கவனிப்பீர்.


11. வளைவுகளிலும், மேம்பாலங்களிலும் எந்த வாகனத்தையும் முந்த முயற்சிக்க கூடாது.


12.பேருந்து இயக்கத்தில் உள்ளபோது கைபேசியை உபயோகிக்காதீர்.


13.போதிய இடைவெளி விட்டுச் சென்றால் எல்லா பயணமும் சுகமான பயணம் என்பதை உணர்வீர்..


14.எதிரில் வரும் வாகனங்களுக்கும், நமது பின்னால் வரும் வாகனங்களுக்கும் வழிவிட்டு எப்போதும் இடது புறமாக செல்ல வேண்டும்.


15.நின்று கொண்டி இருக்கும் பேருந்தை கடந்து செல்வதற்கு முன் வேகத்தை குறைத்து ஒலி எழுப்பி, வாகனத்தின் மறைவில் இருந்து யாராவது சாலையின் குறுக்கே வரலாம் என பதிர்பார்த்து இயக்கவும்.



நிகழ்ச்சியில் பொது மக்களுக்கும் சாலைப் பாதுகாப்பு குறிப்புகள் எடுத்துறைக்கப்பட்டது அவை,


1. சாலை பாதுகாப்பு என்பது நமது உயிர் பாதுகாப்பு என்பதை அறிந்து செயல்படுவோம்.


2. பாதுகாப்பான வாழ்விற்கு பாதுகாப்பாக வாகனத்தை இயக்குவோம்.


3. விலையில்லா உயிரை விபத்தின் மூலம் இழப்பதை தடுப்போம்.


4. பேருந்தில் படிக்கட்டு பயணம் பாதையில் மரணம் என்பதை உணர்ந்து அதனை முற்றிலும் தவிர்ப்போம்.


5.ஓடும் பேருந்தில் ஓடிவந்து ஏறுவதும், பேருந்து நிற்கும் முன் இறங்குவதும், விபத்தை உண்டாக்கும்.


6வாகனம் இயக்கிட உரிமம் இல்லாத நமது பிள்ளைகளை வாகனத்தை இயக்க அனுமதிக்க மாட்டோம் என உறுதி கொள்வோம்.


7. இயற்கை ஊனத்தை இயன்றவரை தடுத்து விட்டோம். செயற்கை ஊனத்தை ஏற்படுத்தும் விபத்தை முற்றிலும் தடுக்க முயற்சி மேற்கொள்வோம்.


8சாலை விதிகளை மீறுவது தற்கொலை முயற்சிக்கு சமம் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.


9வாகன இயக்கத்தின் போதும், சாலையை உபயோகிக்கும் போதும், செல்போன் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.


10. சாலை விதிமுறைகளை நாமும் கற்று பின்வரும் சந்ததியினருக்கும் கற்பிப்போம் என உறுதி ஏற்போம்.


11. வேகத்தை குறைத்து விவேகத்தை வளர்த்து விபத்தில்லா புதிய உலகை காண வளரும் தலைமுறைக்கு வாழ்த்து சொல்வோம்.


12. பாதுகாப்பை ஒரு பண்பாடாக கடைபிடிப்போம்.


13. சாலைகள் வாகன போக்குவரத்துக்கு மட்டும்தான். அதை விளையாட்டு மைதானமாக்கி விடாதீர்கள். சாலையில் விளையாடுவதும். சைக்கிள் ஓட்டி பழகுவதும் ஆபத்தானது.


14.நீங்கள் எப்போதும் நடைபாதையில் நடத்து செல்லுங்கள். நடைபாதை இல்லையெனில், சாயிைல் வலது பக்கம் எதிர்வரும் வாகனத்தை பார்த்து, சாலையில் வலது பக்க ஓரமாக நடந்து செல்லுங்கள்.


15. நின்று கொண்டு இருக்கும் பேருந்தை கடந்து செல்வதற்கு முன் வேகத்தை குறைத்து ஒலி எழுப்பி, வாகனத்தின் மறைவில் இருந்து யாராவது சாலையின் குறுக்கே வரலாம் என எதிர்பார்த்து இயக்கவும்.


16. பேருந்தின் படிக்கட்டில், ஏணியில் தொங்கி கொண்டோ , கூரையில் அமர்ந்து கொண்டோ பயணம் செய்யாதீர்.


17. பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் இறங்கிய பின்புதான் பேருந்தில் ஏற வேண்டும்.


18. தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே விபத்தினால் ஏற்பட்ட இழப்பு.


19. இரு சக்கரவாகனம் இருவருக்கு மட்டுமே. என்பதை மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.


நிகழ்ச்சியை சங்கராபுரம் காவல்துறை ஆய்வாளர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்து பொது மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் நோட்டீஸ் விணியோகித்து பிரச்சாரத்தை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது


Post a Comment

0 Comments